/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'விடாது கறுப்பு' சப் இன்ஸ்பெக்டர் விரக்தி
/
'விடாது கறுப்பு' சப் இன்ஸ்பெக்டர் விரக்தி
ADDED : மார் 10, 2024 04:57 AM
சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் கடந்த சில ஆண்டிற்கு முன் பாகூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார். அப்போது, ரெட்டிச்சாவடி வாலிபரை பைக் திருட்டில் கைது செய்து சிறைக்கு அனுப்பினார். சிறையில் உடல்நல குறைவு ஏற்பட்டு வாலிபர் உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் ஜெயகுருநாதன் உள்ளிட்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவிற்கு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சந்திரபிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் முத்தியால்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். சிறுமி மாயமாகி, கடைசியில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தால் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதனும் 'எங்க சென்றாலும் விட மாட்டராங்கப்பா' என்ற விரக்தியில், தற்போது ஆயுதப்படைக்கு சென்றுள்ளார்.

