/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரதட்சணை கொடுமை: கணவர் மீது வழக்கு
/
வரதட்சணை கொடுமை: கணவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 28, 2025 01:52 AM
புதுச்சேரி: வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
புதுச்சேரி கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் வரலட்சுமி, 27; இவருக்கு ஓசூரை சேர்ந்த கிருஷ்ணராஜ், 30; என்பவருக்கும் இரு வீட்டர் சம்மத்துடன் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு, வரலட்சுமி குடும்பத்தினர் 25 சவரன் நகை, ஒரு வீட்டு மனை, ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு, கிருஷ்ணராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் எப்போது வீட்டு மனையை, கிருஷ்ணராஜ் பெயரில் எழுதி கொடுப்பீர்கள் என்று கேட்ட வரலட்சுமியை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் வரலட்சுமியின் தாய் மகளை பார்ப்பதற்கு ஓசூர் சென்றார். அப்போது, கிருஷ்ணராஜ் வீட்டுக்கு யாரும் வரக்கூடாது என கூறி வரலட்சுமியை அடித்து துன்புறுத்தினார். இதுகுறித்து அவரது தாய் மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே வரலட்சுமியை வீட்டிற்கு அழைத்து செல்ல அவரது சகோதர ஓசூருக்கு சென்றார். அப்போது கிருஷ்ணாராஜ் அவரை தகாத வார்த்தையால் திட்டி, வரலட்சுமியையும் அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்தார்.
வரலட்சுமி புகாரின் பேரில் வில்லியனுார் மகளிர் போலீசார் கிருஷ்ணராஜ் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

