/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சவாலான இருதய அடைப்புகளுக்கு சிப் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை டாக்டர் பாபு ஏழுமலை தகவல்

ADDED : நவ 26, 2025 07:53 AM

புதுச்சேரி: சவாலான இருதய அடைப்புகளுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யாமல், நவீன ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் அடைப்புகளை நீக்கலாம் என டாக்டர் பாபு ஏழுமலை தெரிவித்துள்ளார்.
இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த மருத்துவ கருத்தரங்கை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் துவக்கி வைத்தார். சென்னை எம். ஜி. எம். ஹெல்த் கேர் மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர் பாபு ஏழுமலை பேசுகையில், இருதய ரத்தக்குழாயில் ஏற்படும் கடினமான அடைப்புகளை கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்ட் அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யும் முறையில் சிலருக்கு இது சிக்கல் மற்றும் சவாலாக உள்ளது.
நவீன சிப் ஆஞ்சியோபிளாஸ்டி முறை சவாலான அடைப்புகள் அல்லது அறுவை சிகிச்சைக்கு தகுதியற்ற நோயாளிகளுக்கு பாதுகாப்பாகவும் திறம்படவும் சிகிச்சையளிக்க உதவுகிறது. கரோனரி தமனியின் உள்ளகத்தை இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம், அடைப்புகளின் தன்மைகளை கண்டறிந்து, கல் போன்ற கடினமான கால்சியம் படிந்த அடைப்புகளை, தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் லேசர் மூலம் பிளவுகள் ஏற்படுத்தி இருதய நாளங்களில் உள்ள இரத்த ஓட்ட அடைப்பை சிப் ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் சீராக்குகின்றனர். இதன் மூலம், பெரும்பாலான நோயாளிகள் பைபாஸ் அறுவை சிகிச்சையைத் தவிர்க்க முடியும் என அவர் கூறினார்.
கருத்தரங்கில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷவர்தன் சர்மா, குறைதீர் அதிகாரி ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.