/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் 3வது சுற்று ஒதுக்கீடு வரைவு பட்டியல் வௌியீடு

ADDED : பிப் 05, 2025 05:56 AM
புதுச்சேரி: முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மூன்றாவது சுற்று சீட் ஒதுக்கீடு வரைவு பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.
சென்டாக் ஒருங்கிணைப் பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
முதுநிலை மருத்துவ படிப்பு (எம்.டி., எம்.எஸ்.,) அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மூன்றாவது சுற்று சீட் ஒதுக்கீடு வரைவு பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது லாகின் ஐ.டி.யின் மூலம் சென்டாக் இணையதளம் சென்று, சீட் ஒதுக் கீட்டின் நிலையை சரிபார்த்து கொள்ளவும். ஆட்சேபனை ஏதேனும் இருந்தால், இன்று 5ம் தேதி காலை 11:00 மணிக்குள் தெரிவிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை நிவர்த்தி செய்த பிறகு, மூன்றாவது சுற்று சீட் ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு சீட் ஒதுக்கீடு உத்தரவை டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் நாளை 6ம் தேதி முதல் அனைத்து அசல் சான்றிதழ்கள், தேவையான கட்டணத்துடன், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லுாரி முதல்வரிடம் சமர்ப்பித்து கல்லுாரியில் சேரலாம்.
சீட் ஒதுக்கப்பட்டவர்கள் வரும் 9 ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கல்லுாரியில் சேர வேண்டும். கல்வி கட்டணம் குறித்த விபரங்கள் சென்டாக் இணையதளத்தில் உள்ளது. மேலும் தகவல்கள் அறிய சென்டாக் உதவி மையம் 0413-2655570, 2655571 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.