ஆயுஷ் படிப்புகளுக்கு வரைவு மெரிட் லிஸ்ட் வெளியீடு 17ல் சென்டாக் அலுவலகத்தில் நேரடி கலந்தாய்வு
ஆயுஷ் படிப்புகளுக்கு வரைவு மெரிட் லிஸ்ட் வெளியீடு 17ல் சென்டாக் அலுவலகத்தில் நேரடி கலந்தாய்வு
ADDED : செப் 09, 2026 08:21 PM
புதுச்சேரி: சித்தா, ேஹாமியோபதி, யுனானி ஆகிய ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த வரைவுப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது திருத்தங்கள் இருந்தால், மாணவர்கள் வரும் 11-ம் தேதி மதியம் 1:00 மணிக்குள் centacugneet@dhtepdy.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம். பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு இறுதித் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
இப்படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு வரும் 17ம் தேதி காலை 11:30 மணிக்கு புதுச்சேரி காமராஜர் மணிமண்டப வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் நடைபெறும்.
காலியிடங்கள் இடங்கள்:: தமிழ்நாடு பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லுாரியில் 2 சித்தா சீட்டுகள், மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரியில் 1 ேஹாமியோபதி இடம், கர்நாடகா பெங்களூரு அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரியில் 1 ேஹாமியோபதி, சென்னை அரசு யூனானி மருத்துவக் கல்லுாரியில் 1 யுனானி சீட் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
கலந்தாய்வில் பங்கேற்று இட ஒதுக்கீடு பெறும் மாணவர்கள், சென்டாக் நடத்தும் அடுத்தகட்ட நீட் மற்றும் நீட் அல்லாத பிற படிப்புகளுக்கான கலந்தாய்வுகளில் பங்கேற்க முடியாது. கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் தங்களது சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், நீட் தேர்வு மதிப்பெண் அட்டை மற்றும் புதுப்பிக்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் நகல்களுடன் நேரில் வர வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 0413-2655570, -2655571 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
