தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மதுபான கடைகள் மூட கலால் துறை உத்தரவு

மதுபான கடைகள் மூட கலால் துறை உத்தரவு

மதுபான கடைகள் மூட கலால் துறை உத்தரவு


ADDED : செப் 09, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இடைத்தேர்தலையொட்டி, தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட மதுபான கடைகள் அனைத்தும் இரவு 10:00 மணிக்குள் மூட வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலால் துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் கடந்த 7ம் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அதன்படி தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள சில்லரை, மொத்தம், சுற்றுலா பிரிவு மதுபான கடைகள், கள், சாராயக்கடைகள், மறு உத்தரவு வரும் வரை தினமும் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும்.

அதேபோல் தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பார்கள், கள், சாராயக்கடைகளுக்கு மதுபானங்கள் கொண்டு செல்ல காலை 10;00 முதல் மாலை 5:00 மணிரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த உத்தரவுகள் மீறப்பட்டால், புதுச்சேரி கலால் சட்டம் மற்றும் விதிகள் 1970 மற்றும் அமலில் உள்ள பிற சட்டங்கள் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும் வரை அமலில் இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us