/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்க்கால் சீரமைப்பு பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
வாய்க்கால் சீரமைப்பு பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வாய்க்கால் சீரமைப்பு பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வாய்க்கால் சீரமைப்பு பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜன 09, 2024 07:14 AM

பாகூர் : பரிக்கல்பட்டு கிராமத்தில் வாய்க்கால் மறுசீரமைப்பு பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூர் தொகுதிக்குட்பட்ட பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள 'U' வடிவ வாய்க்கால் சேதமடைந்து உள்ளது. இதனை, பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டம் சார்பில், 29 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் மறு சீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் தனசேகரன், இளநிலை பொறியாளர் மாறன், முன்னாள் எம்.எல்.ஏ., தங்க விக்ரமன், ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.