ADDED : மார் 06, 2024 03:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி, இந்திரா நகர் தொகுதி ஐயங்குட்டிபாளையம், சப்தகிரி டைமண்ட் சிட்டி பகுதியில் சைடு வாய்க்கால் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.
எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி 14 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை அரசு கொறடா ஆறுமுகம் துவக்கி வைத்தார்.

