தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விவேகானந்தா கல்லுாரியில் கல்வியில் நாடகம் பயிற்சி பட்டறை

விவேகானந்தா கல்லுாரியில் கல்வியில் நாடகம் பயிற்சி பட்டறை

விவேகானந்தா கல்லுாரியில் கல்வியில் நாடகம் பயிற்சி பட்டறை


UPDATED : ஜூன் 19, 2026 08:59 PM

ADDED : ஜூன் 19, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2026 08:59 PM ADDED : ஜூன் 19, 2026 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் பி.எட். மாணவர்களுக்கு 'கல்வியில் நாடகம்' என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடந்தது.

கல்லுாரி முதல்வர் சிங்காரவேலு பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து, இன்றைய கல்விச் சூழலில் நாடகக் கலைகளின் முக்கியத்துவம் குறித்தும், பட்டறையின் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு படைப்பாற்றல், தகவல் தொடர்புத் திறன், ஒத்துழைப்பு மனப்பான்மை, வகுப்பறையில் செயல்வழிக் கற்றலை மேம்படுத்தும் நாடக அடிப்படையிலான கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்துவதாகும் என்றார்.

யாழ் நாடக மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் முனைவர் கோபி கல்விக் கருவிகளாக நாடகத்தையும், அரங்கேற்றக் கலைகளையும் பயன்படுத்துவதற்கான பல்வேறு அணுகுமுறைகளை விளக்கி, வகுப்பறைக் கற்பித்தலுக்கேற்ப மாற்றியமைத்து பயன்படுத்தக்கூடிய பல செயல்பாடுகளை செயல்முறை விளக்கம் அளித்தார்.

ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் ஜெயந்தி செய்திருந்தார். இதில், 90 மாணவர்கள், 10 உதவிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us