ADDED : நவ 17, 2026 06:15 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: குரு சித்தானந்த கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
கருவடிக்குப்பம் குரு சித்தானந்த கோவிலில், கார்த்திகை மாதம் முதல் தேதியான இன்று (நவ.,17) கோவிலில் சிறுவர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு குரு சாமிகள் மூலம் மாலை அணிந்து கொண்டு, தங்கள் 48 நாள் விரதத்தை துவங்கினர்.
அதே போன்று, புதுச்சேரி கோவிந்த சாலை பாரதி புரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில், பக்தர்கள் அதிகாலையிலேயே மாலை அணிந்து தரிசனம் செய்தனர். முதலியார்பேட்டை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில், பக்தர்கள் மாலை அணிந்து இன்று முதல் விரதத்தை துவங்கினர்.
