ADDED : ஆக 15, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: காட்டாமணிக்குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்வதால், வரும் 18ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணியால், வரும் 18ம் தேதி, 12:00 முதல் மதியம் 2:00 மணி வரை, முத்தியால்பேட்டை, சோலை நகர், கணேஷ் நகர், அங்காளம்மன் நகர், மஞ்சினி நகர், வ.உ.சி., நகர், வைத்திக்குப்பம், குருசுகுப்பம், மாணிக்க முதலியார் தோட்டம், தெபேசன்பேட், விஸ்வநாதன் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
