/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சொட்டு நீர் பாசனம் செய்முறை விளக்கம்
/
சொட்டு நீர் பாசனம் செய்முறை விளக்கம்
ADDED : ஜன 19, 2026 04:50 AM

திருக்கனுார்: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரியில் பயி லும் இளநிலை இறுதி ஆண்டு மாணவிகள், சந்தை புதுக்குப்பம் கிராமத்தில், சொட்டு நீர் பாசனம் மற்றும் சூரிய மயமாக்கலில் செயல்முறை குறித்து விளக்கம் அளித்தனர்.
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரியில் பயிலும் இளநிலை இறுதி ஆண்டு மாணவிகள், காட்டேரிக்குப்பத்தில் ஊரக வேளாண் பயிற்சி முகாமில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பயிற்சி, வேளாண் கல்லுாரி முதல்வர் மொகமத்யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், திட்ட பொறுப்பாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் தலைமையின் கீழ் நடைபெறுகிறது.
இதில், காட்டேரிக்குப்பத்தில் மாணவிகள் பவிததிரா பூழியில், பிரித்தி சுப்ரஜா, பிரியதர்ஷினி, பிரியங்கா, ராகவி, ராமலெட்சுமி, சபிதா, சஹானா உள்ளிட்டோர், சந்தை புதுக்குப்பம் கிராமத்தில், விவசாயி கலிவரதன் நிலத்தில், சொட்டு நீர் பாசனம் மற்றும் சூரிய மயமாக்கலின் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

