/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்ஜினியரை தாக்கிய டிரைவர் கைது
/
இன்ஜினியரை தாக்கிய டிரைவர் கைது
ADDED : மே 09, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால், மாதா கோவில் விதியை சேர்ந்தவர் சுப்ரமணியன்; திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் வழக்கம் போல் அலுவலக பணியை முடித்துவிட்டு வெளியில் செல்லும்போது அலுவலக முன்பு நிறுத்தியிருந்த டாடா ஏஸ் வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு டிரைவரிடம் சுப்ரமணியன் கூறினார்.
ஆத்திரம் அடைந்த டிரைவர், சுப்ரமணியனை ஆபாசமாக திட்டி, தாக்கினார். புகாரின் பேரில் நிரவி போலீசார் வழக்குப் பதிந்து, நிரவி நடு ஓடுதுறை பகுதியை சேர்ந்த டாடா ஏஸ் டிரைவர் வீரப்பன், 42, என்பவரை கைது செய்தனர்.

