/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிரைவர் மீது பீர் பாட்டில் தாக்குதல்
/
டிரைவர் மீது பீர் பாட்டில் தாக்குதல்
ADDED : ஆக 08, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர் அடுத்த சோரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர், 34; மினி லாரி டிரைவர்.
இவர் நேற்று முன்தினம் காலை சோரியாங்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் மது அருந்தி கொண்டிருந்தார். எதிர் டேபிளில் அதே ஊரைச் சேர்ந்த சுகன், 35, தனது நண்பர் முருகனுடன் 25; மது அருந்தினார்.
சுகன், பாலச்சந்தரிடம் கடந்த ஆண்டு கோவில் திருவிழாவின் போது, எனது உறவினரிடம் நீ ஏன் பணம் வசூல் செய்தாய் என, கேட்டு தகராறு செய்தார்.
ஆத்திரமடைந்த சுகன், பீர்பாட்டிலால் பாலச்சந்திரனை தாக்கினார். புகாரின் பேரில் சுகன், முருகன் மீது பாகூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.