/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிரைவருக்கு திடீர் மயக்கம்: வயலில் பாய்ந்த அரசு பஸ் வில்லியனுார் அருகே டிரைவர் உட்பட 8 பேர் காயம்

ADDED : பிப் 22, 2024 06:49 AM

வில்லியனுார் : வில்லியனுார் அருகே டிரைவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் வயலில் பாய்ந்ததில், 8 பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரியில் இருந்து மணமேடு வழியாக கரையாம்புத்துார் செல்லும் புதுச்சேரி அரசு பஸ் நேற்று மதியம் 1:50 மணியளவில் வில்லியனுார் மங்கலம், செம்பியர்பாளையம் வழியாக ஏம்பலம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
பஸ்சை செம்பியர்பாளையம் டிரைவர் பழனி ஓட்டிச் சென்றார். பஸ்சில் 20 பெண்கள் உட்பட 35க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
பஸ் வேகமாக சென்ற நிலையில், டிரைவர் பழனிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அதில், கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் இருந்த வயலில் பாய்ந்து நின்றது.
இதில், பஸ்சில் பயணம் செய்த துாக்கணாம்பாக்கம் கிருஷ்ணவேனி, 55; ராஜேஸ்வரி, 56; டிரைவர் பழனி, நல்லாத்துார் பத்மா, 52; திலகம், 50; சீத்தாலட்சுமி, 48; சுகந்தி, 40; மங்கலட்சுமி, 39, ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அவர்களை, அப்பகுதி மக்கள் மீட்டு, கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் உதவிக்கு பின், 8 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்கணேஷ் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.