ADDED : செப் 15, 2026 07:53 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால், திருப்பட்டினம், லிங்கசெட்டி தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி, 48; தனியார் நிறுவன டிரைவர். இவருக்கு மது பழக்கம் உள்ளது. சர்க்கரை நோயும் பாதிக்கப்பட்ட இவர், நேற்று முன்தினம் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
மறுநாள் வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் தேடியபோது, அவர், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில், திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
