/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 17, 2024 05:23 AM

நெட்டப்பாக்கம்: கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். தலைமையாசிரியை குணசெல்வி வரவேற்றார். கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர் அக் ஷயா கலந்துகொண்டு போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
முன்னதாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
தொடர்ந்து மாணவர்களுக்கு போதைப்பொருள் குறித்து கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கணினி ஆசிரியர் வெங்கடவரதன் செய்திருந்தார்.
பொறுப்பாசிரியர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.