நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மதுபோதையில் பொது மக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். மடுவுப்பேட் நான்கு முனை சந்திப்பில் ஒருவர் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மணிவாசகம், 25, என்பவரை கைது செய்தனர்.