ADDED : ஜூன் 25, 2026 06:52 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன், போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளி துணை முதல்வர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் பத்மாவதி முன்னிலை வகித்தார்.
இதில், ஆசிரியர் ஹேமலட்சுமி 'போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம்' என உறுதிமொழியை வாசிக்க மாணவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தலைமையாசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் டேவிட் பால், கிரிஜா ஆகியோர் செய்திருந்தனர்.
