தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெட்ரோல் பங்க் உரிமைாளர் கொலை வழக்கு மகன் உள்ளிட்ட மூவரிடம் போலீஸ் 'கிடுக்கிப்பிடி'

 பெட்ரோல் பங்க் உரிமைாளர் கொலை வழக்கு மகன் உள்ளிட்ட மூவரிடம் போலீஸ் 'கிடுக்கிப்பிடி'

 பெட்ரோல் பங்க் உரிமைாளர் கொலை வழக்கு மகன் உள்ளிட்ட மூவரிடம் போலீஸ் 'கிடுக்கிப்பிடி'


ADDED : ஜூன் 25, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருவதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி, பாகூரை சேர்ந்தவர் புருேஷாத்தமன்,50; சேதராப்பட்டில், பெட்ரோல் பங்க் நடத்தி வந்த இவர், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி இரவு பங்கில் இருந்து பைக்கில், வீட்டிற்கு செல்லும் வழியில், ஊசுடு ஏரி அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய் யப்பட்டார்.

வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பின், நிர்வாக காரணங்களுக்காக இவ்வழக்கு அரியாங்குப்பம் போலீ சாருக்கு மாற்றப்பட்டது. எந்த முன்னேற்றமும் இல்லாததால், இவ்வழக்கு, கடந்தாண்டு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியை பிரிந்து வாழ்ந்த புருேஷாத்தமன் இரண்டாம் திருமணம் செய்ய முயன்றதால், அவரது மகன் தனப்பிரவீன், தனது கூட்டாளிகளை வைத்து புருேஷாத்தமனை கொலை செய்தது தெரிய வந்தது.

அதன்பேரில், தனப்பிரவின், அவரது நண்பர்களான தக்கக்குட்டையை சேர்ந்த கலைவேந்தன் , 33, பிரசாந்த், 32 , ஆகியோரை கடந்த13ம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., போலீசார், புதுச்சேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, மூவரையும் மூன்று நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார், தனபிரவின் உள்ளிட்ட மூவரையும் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதில், கொலைக்கு எப்படி திட்டம் வகுத்தனர். அதில், வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? இவர்களுக்கு வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us