ADDED : செப் 24, 2026 05:51 PM
புதுச்சேரி: இந்திரா காந்த அரசு மருத்துவமனையில், மருந்து பாதுகாப்பு கண்காணிப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் 6வது தேசிய மருந்துப் பாதுகாப்பு கண்காணிப்பு வாரம் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, மருந்துகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ் துவக்கி வைத்தார்.
உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன், மக்கள் தொடர்பு அதிகாரி பிரதாப் வசிகர், மருந்தியல் நோடல் அதிகாரி உதயகுமார் மற்றும் மருந்தாளுனர்கள் கலந்து கொண்டனர்.
‘மருந்துகளை பற்றி புரிந்து கொண்டு, அறிவார்ந்து பயன்படுவது, மருந்து பாதுகாப்பு கண்காணிப்பின் மூலம் ஊக்குவிப்போம, பாதுகாப்பான சுகாதாரத்தின் முதல்படி’ என், கருத்தை வலியுறுத்தி நடந்த இப்பேரணி, லால் பகதுார் சார்ஸ்திரி வீதி வழியாக காந்தி வீதி, நேரு வீதி மற்றும் ஆம்பூர் சாலை வழியாக இந்திரா காந்தி அரசு மருத்துவமனையை வந்தடைந்தது. ஊர்வலத்தில், மதர் தெரேசா செவிலியர் கல்லுாரியை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மதர் தெரேசா செவிலியர் கல்லுாரி நுாருல் அலாம் செய்திருந்தார்.
