/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூன் 27, 2025 05:12 AM

புதுச்சேரி: திலாசுபேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கவிதா தலைமை தாங்கினார். ஆசிரியர் ஸ்டெல்லா நாயகி வரவேற்றார். ஆசிரியர் புனிதவதி தொகுத்து வழங்கினார்.
மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேதா மருத்துவ அதிகாரி ராமன் கலந்து கொண்டு, விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்து, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் துவங்கிய ஊர்வலம் ஐய்யனார் கோவில் வீதி, திரவுபதியம்மன் கோவில் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் மாணவிகள் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.