/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் ஒழிப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
/
போதை பொருள் ஒழிப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ADDED : ஜன 25, 2024 05:26 AM

புதுச்சேரி, : போதை பொருள் ஒழிப்பு மாநில ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது.
புதுச்சேரியில் கஞ்சா பழக்கம் அதிக அளவில் உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகி வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர். கஞ்சா விற்பனையை முழுதுமாக ஒழிக்க வேண்டும்.
புதுச்சேரிக்குள் கஞ்சா கொண்டு வரும் ஆணி வேரை கண்டறிந்து களைய வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி போலீசாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, போதை பொருள் ஒழிப்பு மாநில ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம், புதுச்சேரி தலைமை செயலகத்தில் நடந்தது.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். தலைமை செயலர் ராஜிவ் வர்மா, டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ், கலெக்டர் வல்லவன், அரசு செயலர் கேசவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுச்சேரியில் போதை பொருள் தடுப்பு மற்றும் போதை பொருளை கண்டறிதல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.