/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., கட்சியை கலங்கடிக்கும் மருந்து மோசடி வழக்கு
/
காங்., கட்சியை கலங்கடிக்கும் மருந்து மோசடி வழக்கு
ADDED : நவ 09, 2025 05:59 AM
க டந்த 2018--19ம் ஆண்டு புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி, சுகாதார அமைச்சராக மல்லாடி கிருஷ்ணராவ், இருந்த நேரத்தில் தேசிய சுகாதார இயக்ககம் சார்பில் ரூ.2.5 கோடி மதிப்பில் கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுக்கான சத்து மாத்திரைகளை சுகாதாரத்துறைக்கு வாங்கியதில், நடந்த மோசடி வழக்கில், மருந்தாளுநர் நடராஜன் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் துறையின் முன்னாள் இயக்குநர்கள் ராமன், 67; மோகன்குமார், 65; முன்னாள் துணை இயக்குநர் அல்லிராணி,62; உள்ளிட்ட 6 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கும் போதே, மறுபுறத்தில் 'சி.பி.ஐ.,யும் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், மருந்து மோசடி தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மட்டுமன்றி அப்போதைய முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும், என பாஜ., ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருபடி மேலாக காங்., முன்னாள் தலைவர் சுப்ரமணியன், மருந்து மோசடி வழக்கில், மல்லாடி கிருஷ்ணாராவை விசாரிக்க வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு பதிலடியாக, எனது கவனத்திற்கு வராமலும், எனது அனுமதி இல்லாமலும் தான் மருந்துகள் வாங்கப்பட்டுள்ளது.
அதனால் இந்த விவகா ரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, எந்த விசாரணைக்கும் தயார் என மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார். மேலும், தற்போது தான் வகித்து வரும் டில்லி மேலிட பொறுப்பாளர் பதவியை ரத்து செய்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுமாறு கவர்னருக்கு கடி தமும் அனுப்பியுள்ளார்.
நான்கு மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி மீது எழுந்துள்ள மருந்து மோசடி வழக்கு சர்ச்சை காங்., கட்சியினரை கலக்கமடைய செய்துள்ளது.

