/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஆண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
அரசு ஆண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 09, 2025 05:59 AM

புதுச்சேரி: திலாசுப்பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
தலைமையாசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கி, கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். ஆசிரியர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். ஆசிரியர் செயின்ட் ஜெட்ரூட் வரவேற்றார்.
கண்காட்சியில் தொடக்க மற்றும் நடுநிலை பிரிவுகளில் மாணவர்களின் 90க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தியிருந்தனர்.
அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பச்சையம்மாள், ஸ்டெல்லா நாயகி ஆகியோர் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்புகள் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.
கண்காட்சியில் மூலிகை தாவரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பல்வேறு படைப்புகள் இடம் பெற்றன. ஆசிரியர் கனகவல்லி நன்றி கூறினார்.

