/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் போதையில்லா விழிப்புணர்வு ஊர்வலம்
/
புதுச்சேரியில் போதையில்லா விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : நவ 10, 2025 04:06 AM
புதுச்சேரி: வல்லபாய் பட்டேல் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய இளைஞர் நல வாரியம் மற்றும் மை பாரத் சார்பில், புதுச்சேரியில் போதையில்லா விழிப்புணர்வு ஊர்வலம், கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் நடந்தது.
புதுச்சேரி சுதேசி மில்லில் இருந்து துவங்கிய ஊர்வலம், கடற்கரை காந்தி சிலையில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், செல்வகணபதி எம்.பி., அமைச்சர் ஜான் குமார், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், செல்வம் , முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்., அசோக்பாபு , வெங்கடேசன், மாநில பொறுப்பாளர்கள் ஜெயக்குமார், புகழேந்தி, மோகன்குமார், லட்சுமி நாராயணன், கிருஷ்ணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மை பாரத் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவா, காயத்ரி, யூசுதர்சன் ஆகியோர் செய்திருந்தனர்.

