/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : அக் 18, 2024 06:24 AM

புதுச்சேரி: அரபிந்தோ சொசைட்டி சார்பில்,உலக மனநல தினத்தையொட்டி, நம் குழந்தை, நம் கடமை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி அரபிந்தோ சொசைட்டியின் ஒரு அங்கமான சுவர்னிம் சார்பில்,நம் குழந்தை நம் கடமை விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்கள் போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, மனநலத்தை எவ்வாறு மேம்படுத்த வேண்டும், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், கருத்துக்களை மாணவர்களுக்கு கலந்துரையாடினர்.பள்ளி துணை முதல்வர் கீதா, வினோத்குமார், பவித்ரா, கணேசமூர்த்தி, தீப்பாஞ்சான் உட்பட பலர் பங்கேற்றனர்.