/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 12, 2024 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: சூரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
பள்ளி நிர்வாகி விஜயாமணி தலைமை தாங்கினார். ஆசிரியர் வேல்முருகன் வரவேற்றார்.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அனிதா போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்புகள், அதனால் ஏற்படும் தீமைகள், அவற்றை ஒழிக்க நாம் கடை பிடிக்க வேண்டிய கடமைகள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் சுகாதார உதவியாளர் தாமோதரன், செவிலியர் விக்னேஷ்வரி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜெயகுமார், கலையரசி, தமிழரசி ஆகியோர் செய்திருந்தனர்.