/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 26, 2025 11:24 PM

திருபுவனை:புதுச்சேரி பி.எஸ். பாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதைப் பொருள் தடுப்பு தினத்தையொட்டி, திருபுவனை காவல் நிலையத்தின் சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கையேடுகளை வழங்கி பேசுகையில், 'ஜூன்-26 சர்வதேச போதைப்பொருள் தடுப்பு தினம்.
இதை முன்னிட்டு புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி., ஷாலினிசிங் உத்தரவுப்படி ஒவ்வொரு பள்ளியிலும் அந்தந்த காவல் நிலைய அதிகாரி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
மாணவ, மாணவிகள், போதைப் பொருள் என்றால் என்ன? போதைப் பொருள் நுகர்வதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள், ஒரு மனிதன் போதைக்கு அடிமையாவதால் அவரது மனைவி, பிள்ளைகளின் எதிர்கால வாழக்கை பாழாகிறது. இதனால் சமுதாயத்தில் ஏற்படும் தீங்கு குறித்து நீங்கள் அறிந்து விழிப்போடு இருப்பது அவசியம்.
பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் மாணவர் சமுதாயத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.