/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 06, 2025 07:08 AM

வில்லியனுார் : கோர்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் முரளி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் பத்மாவதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தெற்கு பகுதி சப் கலெக்டர் குமரன் பங்கேற்று, போதை பொருளால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் தடுப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
தலைமை ஆசிரியர் திருக்காமீஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியர் தமிழரசி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர். ஆசிரியர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.