/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஏப் 13, 2025 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : அரியூர் வெங்கடேஸ்வரா மருந்தியல் கல்லுாரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி சேர்மன் ராமச்சந்திரன் வழிகாட்டுதலின் படி நடந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்லுாரி பொதுமேலாளர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ஜெயராமன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மேற்கு பகுதி போலீஸ் எஸ்.பி., வம்சிதரரெட்டி பங்கேற்று போதை பொருளால் ஏற்படும் சீர்கேடுகள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் வெங்கட்ராமன், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இணைப் பேராசிரியர் உமேஷ் நன்றி கூறினார்.