ADDED : டிச 21, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை : மதகடிப்பட்டில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பு கடை வீதியில் குடிபோதையில் நின்றிருந்த ஒருவர், அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பெண்கள் மற்றும் அவ்வழியே சென்றவர்களை திட்டி ரகளையில் ஈடுபட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரகளையில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் மதகடிப்பட்டு அடுத்த தமிழக பகுதியான லிங்காரெட்டிப்பாளையம், மேட்டுத்தெருவை சேர்ந்த சத்தியராமன், 45, என, தெரியவந்தது.
அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.