ADDED : ஜன 12, 2026 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
: அரியாங்குப்பம்: மது போதையில், பொதுமக்களை அவதுாறாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் சொர்ணா நகர் சாலையில், ஒருவர் நின்று கொண்டு மது போதையில் ஆபாசி ரகளையில் ஈடுபட்டுவருவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, உதவி சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் அங்கு சென்று, போதையில் நின்றவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர், சீர்காழி அடுத்த ஆரபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

