நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், திருப்பட்டினம் பகுதியில் திட்டச்சேரி சாலை பேருந்து நிலையம் அருகில் ஒருவர் நேற்று முன்தினம் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசியதாக பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரின் விசாரணையில் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த கணேஷ் மகன் பிரேம்குமார்,34; என்று தெரியவந்தது.
புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து பிரேம்குமாரை கைது செய்தனர்.

