UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 05:32 PM
புதுச்சேரி: முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் வேல்முருகன்,42. இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் நுாறடி சாலையில் தேங்காய்திட்டு நோக்கி செவரலெட் காரில், (பி.ஒய்.01.பி.இசட்.6442) சென்று கொண்டிருந்தார்.
ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே சென்றபோது முன்னால் சென்ற யமஹா பாசினோ (பிஒய்.05.விஎச்.6859) ஸ்கூட்டரின் பின்னால் மோதினார். இதில், ஸ்கூட்டரில் வந்த முத்தியால்பேட்டை சதீஷ்குமார்,40; என்பவர் காயமடைந்தார். மேலும் அங்கிருந்து காரில் தப்பிய வேல்முருகன், தேங்காய்திட்டு தனியார் பள்ளி அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி நின்றார். மின்கம்பம் சேதமடைந்தது. இது குறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில், வேல்முருகன் மதுபோதையில், காரை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தியது தெரியவந்தது.
