UPDATED : நவ 29, 2026 05:30 PM
ADDED : நவ 29, 2026 05:30 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு நிறுவனத்தில் டாக்டர்களுக்கான தொடர் மருத்துவக் கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கை மருத்துவக் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். சென்னை, பார்வதி மருத்துவமனையின் மூத்த ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் பிரதீப் குமார் பங்கேற்று, ரத்தநாள உள்நோக்கு செயல்படுகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து விளக்கினார்.
கருத்தரங்கில், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி பிரதாப் வசிகர், குறை தீர்ப்பு அதிகாரி ரவி மற்றும் அனைத்து மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
