/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துபாய் திருக்குறள் நிகழ்ச்சி: அமைச்சர் பங்கேற்பு
/
துபாய் திருக்குறள் நிகழ்ச்சி: அமைச்சர் பங்கேற்பு
ADDED : மே 08, 2025 01:23 AM

புதுச்சேரி: துபாயில் நடந்த திருக்குறள் நிகழ்ச்சியில், புதுச்சேரி அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்து கொண்டார்.
உலக பொதுமறையான திருக்குறளை உலகம் முழுதும் பரப்பும் வகையில், ஸ்கைப்ளூ மீடியா டத்தோ மணிகண்டமூர்த்தி வேலாயுதம் தலைமையில் திருக்குறள்நிகழ்ச்சி நடந்தது.துபாய் ேஷய்க் ரஷீத் ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், திருக்குறள் கருத்தரங்கு, சிறப்பு குழந்தைகளின் நடனம், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின்தமிழ் ஓசை குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, வட்டார வழக்கு, குறள் தரும் தத்துவம், பழமொழியும் குறள்மொழியும், மழலை கூறும் நல்லுலகு என, 4 தலைப்புகளில் நடந்த போட்டிகளில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றனர்.
இதில், துபாய் இந்திய துணை துாதர் சதீஷ்குமார் சிவன், மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் சரவணன், பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பேராசிரியர் ஞானசம்பந்தன், வழக்கறிஞர் சுமதி, தேர்தல் வியூக வகுப்பாளர் பார்த்திபன், ஈரோடு மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் திருக்குறள் புத்தகம், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

