/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல சாதனைகளை செய்தவர் டி.வி.ஆர்.,; அண்ணாமலை பல்கலை., பேராசிரியர் ஞானகுமார் புகழாரம்
/
பல சாதனைகளை செய்தவர் டி.வி.ஆர்.,; அண்ணாமலை பல்கலை., பேராசிரியர் ஞானகுமார் புகழாரம்
பல சாதனைகளை செய்தவர் டி.வி.ஆர்.,; அண்ணாமலை பல்கலை., பேராசிரியர் ஞானகுமார் புகழாரம்
பல சாதனைகளை செய்தவர் டி.வி.ஆர்.,; அண்ணாமலை பல்கலை., பேராசிரியர் ஞானகுமார் புகழாரம்
ADDED : அக் 06, 2024 06:10 AM

சிதம்பரம் : ''ஆடம்பரம் இல்லாமல், மக்களின் நலனுக்காக பல சாதனைகளை செய்துள்ளார் டி.வி.ஆர்., ''என, அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் ஞானகுமார் புகழாரம் சூட்டினார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில், 'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆரின் 116வது பிறந்தநாள் விழாவையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சிதம்பரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு, பேராசிரியர் லதா தலைமை தாங்கினார்.
அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஞானகுமார், ஏழிசை வல்லபி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.
இதில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு, மேலவீதி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்கள், பல்கலைக்கழக கால்நடை பண்ணைக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள மாட்டுத் தீவனம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய இரண்டு மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப் பட்டது. பேராசிரியர் பாலகுமார், கவிஸ்ரீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் 'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆர்., உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பேராசிரியர் ஞானகுமார் பேசியதாவது:
காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட டி.வி.ஆர்., பின்தங்கிய மக்களின் உயர்வுக்காக தொண்டாற்றினார். ஆடம்பரம், விளம்பரம் இல்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தினார்.
மக்களின் பிரச்னைகள் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொலைநோக்கு சிந்தனையாளராக செயலாற்றினார்.
மாணவ, மாணவியரின் கல்வி அறிவை மேம்படுத்த அரசு பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி வினா விடை பகுதியை தொடங்கினார். தமிழ் மற்றும் தமிழரின் நலனுக்காக டி.வி.ஆர்., தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இவ்வாறு அவர் பேசினார்.
கார்த்திக் ராஜா நன்றி கூறினார்.