/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜவுளி பூங்கா கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
ஜவுளி பூங்கா கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 20, 2024 05:07 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் பஞ்சாலைகளை பயன்படுத்தி, ஜவுளி பூங்கா அமைக்கக் கோரி இ.கம்யூ., சார்பில் ஏ.எப்.டி., மில் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி., மாநில கவுரவ தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச் செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க அமைப்பாளர் சிவா, காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் மா.கம்யூ., ராஜாங்கம், வி.சி., தேவ பொழிலன், ம.தி.மு.க., கப்ரேல் மற்றும் பஞ்சாலை தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
இ.கம்யூ., சார்பில், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் அந்தோணி, அமுதா, ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் கூறுகையில், 'பி.எம் மித்ரா திட்டத்தில், புதுச்சேரியில் புதிய ஜவுளி பூங்கா அமைக்க, மத்திய ஜவுளி அமைச்சக செயலரிடம் மனு அளிக்கப்பட்டது. அதற்கு, துறை செயலர், 'பி.எம் மித்ரா அல்லது வேறு புதிய திட்டத்தில், ஜவுளி பூங்கா அமைக்கலாம். அதற்கு புதுச்சேரி அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என, தெரிவித்தார்.
புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சார்பில், தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனு அளிக்கப்பட்டது. அவரும் சட்டசபையில், ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என, அறிவித்தார்.
அறிவிப்பு கிடப்பிலேயே உள்ளது. புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைந்தால், 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்' என்றார்.

