/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூலநாதர் கோவிலில் இ - - உண்டியல் சேவை
/
மூலநாதர் கோவிலில் இ - - உண்டியல் சேவை
ADDED : ஆக 23, 2025 04:31 AM

பாகூர் : பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், இ - உண்டியல் சேவையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், பக்தர்களின் வசதிக்காக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பாகூர் கிளை சார்பில், இ - உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த இ - உண்டியல் சேவை துவக்க விழா நேற்று நடந்தது.
இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, மொபைல் மூலமாக கியூ ஆர் கோட்டினை ஸ்கேன் செய்து வங்கி கணக்கில் நேரடியாக காணிக்கையை, செலுத்தி, இ - உண்டியல் சேவையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர் ஹரிதா, மார்க்கெட்டிங் மேலாளர் திவ்யா, பாகூர் கிளை மேலாளர் ஸ்ரீஜித், உதவி மேலாளர் சூர்யா, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார் மற்றும் பாகூர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.