sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பணிபுரியும் பெண்கள், கல்லுாரி மாணவிகளுக்கு இ-ஸ்கூட்டர்! தேர்தலை குறிவைத்து முதல்வரின் 'பலே' திட்டம்

/

பணிபுரியும் பெண்கள், கல்லுாரி மாணவிகளுக்கு இ-ஸ்கூட்டர்! தேர்தலை குறிவைத்து முதல்வரின் 'பலே' திட்டம்

பணிபுரியும் பெண்கள், கல்லுாரி மாணவிகளுக்கு இ-ஸ்கூட்டர்! தேர்தலை குறிவைத்து முதல்வரின் 'பலே' திட்டம்

பணிபுரியும் பெண்கள், கல்லுாரி மாணவிகளுக்கு இ-ஸ்கூட்டர்! தேர்தலை குறிவைத்து முதல்வரின் 'பலே' திட்டம்

1


ADDED : நவ 20, 2025 05:20 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:20 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பணிபுரியும் பெண்கள், கல்லுாரிக்கு செல்லும் மாணவிகளுக்காகஇ-ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை புதுச்சேரி அரசு,முதல்வரின் புதுமை பெண்கள் என்ற பெயரில் செயல்படுத்த உள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ள சூழ்நிலையில் அனைத்து திட்டங்களையும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு வேகப்படுத்தி வருகிறது.

இப்போது பணிபுரியும் பெண்கள், கல்லுாரி செல்லும் மாணவிகளுக்காக இ-ஸ்கூட்டர் திட்டத்தை, முதல்வரின் புதுமை பெண்கள் என்ற பெயரில் ஆதிதிராவிடர் நலத் துறை வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதனும் ஓகே சொல்லியுள்ளார்.

தகுதி என்ன விண்ணப்பதாரர் புதுச்சேரி அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் சாதியினர் அல்லது பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து வசித்ததன் அடிப்படையில் புதுச்சேரியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 8,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் தேதியில் விண்ணப்பதாரரின் வயது 18 வயதுக்குக் குறையாமலும், 40 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

யாருக்கு கிடையாது


மத்திய, மாநில அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனம், தன்னாட்சி அமைப்புகள், நிறுவனங்கள் அல்லது வங்கிகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது மாணவிக்கு மட்டுமே வாழ்நாளில் ஒருமுறை இந்த உதவி பெறத் தகுதியுடையவர். நீடித்த நோய் அல்லது இ-ஆட்டோ மானியத் திட்டத்தின் கீழ் உதவி பெறும் விண்ணப்பதாரர் தகுதியற்றவர்.

உரிமம் தேவை


விண்ணப்பதாரர் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் மோட்டார் சைக்கிள் கியர் இல்லாத அல்லது மோட்டார் சைக்கிள் கியர் கொண்ட ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர், இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவியாக இருந்தால், பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். முதுகலைப் பட்டப்படிப்பாக இருந்தால், இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டப்படிப்பு மாணவியாக இருந்தால், முதுகலைப் பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இவர்களுக்கு முன்னுரிமை


துாரமான பகுதிகளில் வசிக்கும் பணிபுரியும் பெண்கள், பெண்களுக்குத் தலைமை தாங்கும் குடும்பங்கள், கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மற்றும் 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பணிபுரியும் பெண்கள், விண்ணப்பிக்கும் நேரத்தில் லாபம் ஈட்டும் வேலைக்கான போதுமான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

எவ்வளவு கிடைக்கும்


விண்ணப்பங்கள் முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும். இ-ஸ்கூட்டரின் விலையில் 75 சதவீத மானியம் அல்லது ரூ. 1,00,000, இதில் எது குறைவோ, அது வழங்கப்படும்.

இதுமட்டும் இல்லாமல் மத்திய அரசின் பி.எம்.,இ--டிரைவ் திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற பிறகு, அதிகபட்சமாக ஒரு வாகனத்திற்கு ரூ. 5,000 உடன் பயனாளியின் கணக்கிற்குச் செலுத்தப்படும். விரைவில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட உள்ளது.

மானியம் எப்படி...


இந்த திட்டத்தின் கீழ் பயனாளி இ--ஸ்கூட்டர் ஏற்கனவே வாங்கியிருந்தால், விண்ணப்பதாரர் அசல் விலைப்பட்டியலைத் துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும். மானியத் தொகை பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும். எனினும், விலைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இ--ஸ்கூட்டர் வாங்கிய தேதி, இந்த விதிகள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட தேதிக்கு பிந்தையதாக இருக்க வேண்டும். பயனாளி இ--ஸ்கூட்டர் வாங்கவில்லை என்றால், விண்ணப்பதாரர் மொத்த வாகன விலையில் 25 சதவீத தொகையை ஆரம்ப கட்டணமாக டீலருக்கு செலுத்த வேண்டும். பிறகு அதற்கான விலைப்பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும். மீதமுள்ள மானியத் தொகை டீலரின் கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.








      Dinamalar
      Follow us