ஜப்பான் முறையில் ஆரம்ப கல்வி உளவியல் புத்துணர்வு பயிற்சி
ஜப்பான் முறையில் ஆரம்ப கல்வி உளவியல் புத்துணர்வு பயிற்சி
ADDED : ஆக 12, 2026 05:54 PM
புதுச்சேரி: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் ஜப்பானிய முறையிலான ஆரம்பக் கல்வி வகுப்பறையில், ஏ.ஐ., பயன்பாடு குறித்த உளவியல் புத்துணர்வு பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
பள்ளியின் முதல்வர் சம்பத் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சுசிலா சம்பத் வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர் பஞ்சு ராமலிங்கம் கருத்தரங்கின் குறிக்கோள் குறித்து பேசினார்.
ஜப்பான் நாட்டின் டோக்யோ பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் இசிக்காவா மிசிக்கோ, பேராசிரியர் காயோ சவாடா, கிடோமி குயவாமா, ஜெய்ஹோ பல்கலைக்கழக பேராசிரியர் டகாசி வகயாமா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன் நோக்கவுரை ஆற்றினார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் ஹரிஷ்குமார் நன்றி கூறினார். கருத்தரங்கில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
