ADDED : ஆக 12, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, இந்திராகாந்தி மருத்துவ கல்லுாரியின் ரத்த வங்கி, இந்தியன் வங்கி மற்றும் புதுச்சேரி ரோட்டரி கிளப் விஷன் ஆகியன சார்பில் இ.சி.ஆர். இந்தியன் வங்கிக் கிளையில் ரத்த தான முகாம் நடந்தது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் குடியிருப்பு மருத்துவ அதிகாரி குரு பிரசாத், இந்திய மருத்துவச் சங்கத்தின் செயலாளர் சீனிவாசன் மற்றும் இந்தியன் வங்கியின் மண்டலத் தலைவர் வெங்கட சுப்ரமணியம், புதுச்சேரி விஷன் ரோட்டரி கிளப்பின் தலைவர் ரூபா லாரன்ஸ் மற்றும் செயலாளர் திருமதி தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் இந்தியன் வங்கியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினார். ஏற்பாடுகளை இந்தியன் வங்கி அதிகாரிகள் செய்திருந்தனர்.
