தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுதந்திர தின கராத்தே போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை

சுதந்திர தின கராத்தே போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை

சுதந்திர தின கராத்தே போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை


ADDED : ஆக 12, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டில்லியில் நடந்த சுதந்திர தின கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி, விழுப்புரம் மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். 

டில்லியில், 20வது சுதந்திர தின கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடந்தது. இப்போட்டியில், விழுப்புரம் ஆசிரியர் நகர், கண்டமங்கலம் மற்றும் திருக்கனுார் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், செய்க்கோ காய் தலைவர் மற்றும் உலக நடுவருமான பழனிவேல் தலைமையில் பங்கேற்றனர்.

மாணவர்களுடன், செய்க்கோ காய் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர் அரவிந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

போட்டியில், மாணவர்கள் சஞ்சய், கமலேஷ்வரன் ஆகியார் வெள்ளி பதக்கம், வருஷன், தேஜேஷ், ஹர்ஷவர்தன், தில்ஷாந்த் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.

பதக்கங்களை வென்று புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு செய்க்கோ காய் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us