
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வில்லியனுார் தொகுதி ஒதியம்பட்டு திருவேணி நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் குடிசை மாற்று வாரியம் மூலம் 41 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பழுதுபார்க்கும் பணி மற்றும் உட்புறச் சாலைகள், வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இதில், தர்மராஜ், கலியபெருமாள், ஞானசுந்தரம், பாலகுரு, வாசு, ராஜேந்திரன், ஜீவா, நடராஜன், வேலு, தி.மு.க., நிர்வாகிகள் மணிகண்டன், செல்வநாதன், அங்காளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.