/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பம் சுகாதார நிலையத்தில் இ.சி.ஜி., அல்ட்ரா சவுண்ட் இயந்திரம்

ADDED : ஏப் 27, 2025 04:42 AM

அரியாங்குப்பம் :  அரியாங்குப்பம் துணை சுகாதார நிலையத்தில், ரூ.16 லட்சம் மதிப்பில் இ.சி.ஜி., அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரத்தை பாஸ்கர் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் துணை சுகாதார நிலையத்தில் இ.சி.ஜி., அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரம் இல்லாமல் இருந்ததால், பரிசோதனை செய்ய நோயாளிகள் வெளி பகுதிக்கு சென்றனர். மத்திய அரசு   பிரதான் மந்திரி சுரஷித் அபியான் திட்டம் (பி.எம்.எஸ்.எம்.ஏ)  மூலம் 16 லட்சம்  மதிப்பில், புதிய இ.சி.ஜி., அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரம் அரியாங்குப்பம் துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குவழங்கப்பட்டது.
இந்நிலையில், சுகாதார மைய அறையை, பாஸ்கர் எம்.எல்.ஏ., நேற்று இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சுகாதார இயக்குனர் ரவிச்சந்திரன், துணை இயக்குனர் அனந்தலட்சுமி, அரியாங்குப்பம் துணை சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி தாரணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.