/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அரசை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
மாநில அரசை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 21, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: புதுச்சேரி அரசை கண்டித்து இ.கம்யூ., சார்பில் வில்லியனுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொகுதி செயலாளர் பெஞ்சமின் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் பெருமாள், பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.பி.ஐ., மாநில நிர்வாக குழு உறுப்பினர் அந்தோணி, குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
வில்லியனுார், மங்கலம் மற்றும் ஊசுடு தொகுதியில் வீடற்ற ஏழை எளிய மக்களை கணக்கெடுத்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கவேண்டும்.
வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தவேண்டும் உட்பட பல கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.