/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மரண குழியாக மாறிய இ.சி.ஆர்., வாகன ஓட்டிகள் திக்... திக்...
/
மரண குழியாக மாறிய இ.சி.ஆர்., வாகன ஓட்டிகள் திக்... திக்...
மரண குழியாக மாறிய இ.சி.ஆர்., வாகன ஓட்டிகள் திக்... திக்...
மரண குழியாக மாறிய இ.சி.ஆர்., வாகன ஓட்டிகள் திக்... திக்...
ADDED : ஜன 03, 2025 01:52 AM

புதுச்சேரி: மரண குழியாக மாறி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் இ.சி.ஆரை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
புதுச்சேரியில் கொட்டிய கனமழையில் நகரம் மற்றும் நகரின் வெளிப்புற சாலைகள் ஆங்காங்கே, சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. குறிப்பாக, கருவடிக்குப்பம் சிவாஜி சிலை முதல் கொக்குபார்க் வரை இ.சி.ஆர்., கந்தலாகி கிடக்கிறது.
பல இடங்களில் மெகா சைஸ் பள்ளம் உருவாகியுள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இ.சி.ஆரில், ஜல்லிகள் பெயர்ந்து, சாலை பல்லாங்குழி போல் பல்இலிக்கிறது.
இந்த பள்ளங்களில், இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால், கனரக வாகனங்கள் செல்லும்போது, புழுதி புயல் வீசுகிறது.
மெகா பள்ளம் உள்ள இடத்தில் மின் விளக்குகளும் எரியவில்லை. இதனால் இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து தினமும் அடிபட்டு செல்கின்றனர்.
மரண குழியாக மாறி வரும் இ.சி.ஆரில், பெரிய விபத்து நடந்து, உயிரிழப்பு ஏற்படும் முன் பொதுப்பணித் துறையினர் மரண குழிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.