/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளிகள் இன்று இயங்கும் கல்வித்துறை அறிவிப்பு
/
அரசு பள்ளிகள் இன்று இயங்கும் கல்வித்துறை அறிவிப்பு
அரசு பள்ளிகள் இன்று இயங்கும் கல்வித்துறை அறிவிப்பு
அரசு பள்ளிகள் இன்று இயங்கும் கல்வித்துறை அறிவிப்பு
ADDED : ஜன 04, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் கனமழைக்கான விடுமுறையை சமன் செய்ய இன்று (4ம் தேதி) அனைத்து அரசு பள்ளிகளும் இயங்கும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் மாஹே, ஏனாம் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி பெய்த கனமழை காரணமாக அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், இன்று (4ம் தேதி) சனிக்கிழமை இப்பகுதிகளில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் இயங்கும் என, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அறிவித்துள்ளார்.