/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு
/
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு
ADDED : டிச 12, 2024 06:23 AM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இயங்கி வரும், அரசு உயர்நிலை பள்ளியை கல்வித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடம் பழுதடைந்ததால், அதனை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டடம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
இதற்காக, அங்கு படித்த மாணவ, மாணவிகள் அருகிலுள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சீர்திருத்தப் பள்ளியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள் இன்றி பற்றாக்குறை நிலவி வருவதாகவும், சீர்த்திருத்த பள்ளிக்கு வரும் இளம் குற்றவாளிகளை நேரில் பார்க்கும் அபாயம் உள்ளதாகவும் சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்திக்கு புகார் வந்தது.
இதையடுத்து, கல்வித்துறை செயலர் ஜவஹர், பாஸ்கர் எம்.எல்.ஏ., கல்வித்துறை இயக்குனர் பிரியாதர்ஷினி உள்ளிட்ட ஆதிகாரிகள் நேற்று சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில், மாணவர்களுக்கான வகுப்பறை இன்றி பொதுவெளியில் அமர்ந்து பயின்று வருவது தெரியவந்தது.
இதையடுத்து, அரசு பள்ளிக்கு புதிய கட்டடம் அமைக்கும் வரையில், சீர்த்திருத்தப் பள்ளியில் மாணவர்களுக்கான இட வசதியை ஏற்படுத்தவும், அரசு பள்ளிக்கு புதிய கட்டடம் அமைக்கும் பணியில் விரைந்து துவங்கவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.